அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கு அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக அஜித் இருந்தாலும் விஜய் அளவுக்கு அவருடைய படங்கள் பிசினஸ் இல்லை என்பதும் விஜய்யை விட அவர் ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தாலும் விஜய் படங்களுக்கு தான் வசூல் கிடைப்பதால் அவருக்கு தான் ஒவ்வொரு படத்திலும் சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்திற்கு அஜித்தின் சம்பளம் 120 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் தற்போது பொருளாதார பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அஜித்தின் சம்பளத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ என்ற படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் திரை உலக பிரபல விமர்சகர்கள் இது குறித்து கூறிய போது ’அஜித்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் தர வாய்ப்பே இல்லை என்றும் அவரது படங்களின் மொத்த வசூலே 200 முதல் 250 கோடி ரூபாய் தான் என்றும் அந்த வகையில் இவ்வளவு பெரிய சம்பளம் அவருக்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்றும் இது யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிட்ட தகவல் என்றும் கூறி வருகின்றனர்.
அஜித்துக்கு அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என்றும் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒருவேளை நல்ல வசூலை குவித்தால் இந்த வதந்தி உண்மையாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!