• Jan 19 2025

பலூன் சுடும் போட்டிக்கு பார்ட்டி வைத்த இர்பான்..? இறுதியில் நடந்த ட்விஸ்ட்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தற்போது சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு சமமாக யூடியூப்பர்களும் வளர்ந்து விட்டார்கள். அவ்வாறு  புகழ்பெற்ற யூடியூப்பராக திகழ்பவர் தான் இர்பான்.

இவருக்கு கிட்டத்தட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இவரது சேனலை ஃபாலோ பண்ணி வருகிறார்கள். அதில் தினசரி வீடியோக்களை வெளியிட்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் இர்பான்.

இவர் அண்மையில் தான் ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது மனைவியுடன் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய மனைவி கர்ப்பமாக காணப்படுகிறார். அத்துடன் தற்போது விஜய் டிவியில் நடைபெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் இர்பான்.


இந்த நிலையில் பிரபல யூடியூப்பர் இர்பான் வெளியிட்ட வீடியோவில் தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பற்றி கூறியுள்ளார். மேலும் இதனை பார்ட்டி வைத்தும் கொண்டாடி உள்ளார்.


அதாவது தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று இர்பான் சொல்ல, அவரது மனைவி தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார்.இவ்வாறு இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட, அதில் இர்பான் தான் வெற்றி பெறுகிறார்.

இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இர்பான். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.


Advertisement

Advertisement