• Mar 13 2026

மீனா தங்கச்சி சீதா திடீர் கர்ப்பம்.. காரணம் யார்? அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் தங்கையாக சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா கர்ப்பமாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நட்சத்திரங்கள் கூட இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் அவர்கள் பதிவு செய்யும் ரில்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் தங்கையாக நடித்து வரும் சங்கீதா சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்றும் அந்த படத்தின் பூஜையில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட படப்பிடிப்பு வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும் அவர் வெட்கத்துடன் கண்ணாடி பார்ப்பது போன்றும், கர்ப்பிணியாகவும் நடித்திருக்கும் அவரது நடிப்பு அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் இது அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பா? அல்லது வேறு ஏதேனும் புதிய சீரியலில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சங்கீதா இந்த வீடியோவை பதிவு செய்து படப்பிடிப்பு தளம் என்று மட்டும் பதிவு செய்துள்ளதால் இது அவர் நடிக்கும் படத்தின் காட்சியா? அல்லது வேறு சீரியலின் காட்சியா? என்பதை அடுத்தடுத்த பதிவுகளை அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement