• May 10 2024

மனைவியின் புகைப்படத்தை தெறிக்க விடும் விக்கி… உருகும் நயனின் ரசிகர்கள்-இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகை நயன்தாராவும் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 9 திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு திரைப்பிரபலங்களும், நண்பர்களும், அரசியல்வாதிகளும் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் பெற்றனர். பின்பு தம்பதியினர் இருவரும் நயன்தாராவின் வீட்டிற்கு சென்று அங்கு இறைவனின் ஆசீர்வாதத்தையும் பெற்றோரின் ஆசீர்வாதத்தையும் பெற்றனர்.

இந்நிலையில் இவர்கள் தங்கள் ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சென்றனர். தனது நீண்டநாள் காதலரான விக்கியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா தங்கள் காதல் பயணத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். மற்றும் தற்போது தனது மனைவி நயன்தாராவின் ஓரிரு படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் நயன்தாரா சாதாரண உடையில் புதுப்பாணியில் மற்றும் ஸ்டைலாக காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இது அந்த புகைப்படம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement