• Jan 19 2025

பிரபல தயாரிப்பாளருடன் அனுஷ்காவுக்கு திருமணமா? பிரபாஸ் அறிவிப்புக்கு பதிலடியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் தன்னுடைய வாழ்வில் ஒரு புதிய உறவு வரப்போவதாகவும் அந்த அறிவிப்புக்காக காத்திருங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் பிரபாஸ் தனது திருமண அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் என்று கூறி மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் பிரபாஸ் தனது திருமண அறிவிப்பை மறைமுகமாக அறிவித்த அடுத்த நாளே அனுஷ்காவின் திருமணம் குறித்த செய்திகள் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்கா ஒரு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்ய போவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்ட நிலையில் இருவரும் இந்த வதந்தியை மறுக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது பிரபாஸ் திருமண அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் அனுஷ்கா தரப்பு அதிருப்தி அடைந்திருப்பதாகவும் இதை அடுத்து பிரபாஸ்-க்கு பதிலடியாக அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு கன்னட திரைப்பட தயாரிப்பாளரை அனுஷ்கா காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் தான் திருமணம் நடைபெற இருப்பதாகவும் பிரபாஸ் திருமணத்திற்கு முன்பே அனுஷ்கா திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அனுஷ்காவின் திருமண தகவல் தெலுங்கு ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருந்தாலும், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது அனுஷ்காவே திருமண அறிவிப்பை வெளியிட்டால் அந்த தகவல் நம்பத்தகுந்ததாக கருதப்படும். அதுவரை இந்த திருமண தகவலும் வதந்தியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement