• Jan 19 2025

எல்லாரும் என்னைய தான்டா ஈசியா அடிக்கிறீங்க..! பிக் பாஸ் பிரதீப் போட்ட ட்விட்! திடீரென என்னாச்சு?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் பிரதீப் அன்டனி. இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பரபரப்பாக  பேசப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இரு வீடுகள், புதிதாக ரூல்ஸ், 18 போட்டியாளர்கள், வரலாற்றின் முதல் தடவையாக 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களில் இதில் பங்கு பற்றிய பிரதீப் அன்டனினுக்கு அமோக ஆதரவு மக்களால் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவர் தான் இறுதியில் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என்றும் கணிக்கப்பட்டது.


ஆனாலும் இதில் எதிர்பாராத விதமாக அதில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்கள், பிரதீப் அன்டனியால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர் கழிப்பறை கதவை திறந்து வைத்துக்கொண்டு பாத்ரூம் போகிறார் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க, அவர் பக்கமுள்ள நியாயங்களை விசாரிக்காமலலே அதிரடியாகவே ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றி இருந்தார் கமலஹாசன்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் இல்லாமல் கமலஹாசனுக்கும் பூர்ணிமாவுக்கும் எதிராக கண்டனங்கள்  வலுத்தது. ஒரு கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சகப் போட்டியாளர்கள் அவர் மீது எந்த தப்பும் இல்லை என பேட்டி கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது பிரதீப் அன்டனி தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சிறு குழந்தை ஒன்றை வைத்து விளையாடுவது போலவும், அந்த குழந்தையிடம் அடி வாங்குவது போலவும் இருக்கின்றது. ஆனால் அதற்கு 'எல்லாரும் என்னைய தான்டா ஈசியா அடிக்கிறீங்க' என ட்விட் போட்டுள்ளார்.  

 


Advertisement

Advertisement