• Jul 27 2024

8 வருடங்களில் 12 தோல்வி படங்கள்.. ரிலீசுக்கு தயாரான அடுத்த படம்.. இதிலாவது தேறுவாரா விஜய் ஆண்டனி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த 8 வருடங்களில் வரிசையாக 12 தோல்வி படங்கள் கொடுத்த விஜய் ஆண்டனி அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி இருப்பதாகவும் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. வெறும் 3 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளில் அவர் நடித்த ’சைத்தான்’ ’எமன்’ ’அண்ணாதுரை’ ’காளி’ ‘திமிரு பிடிச்சவன்’ ’கொலைகாரன்’ ’கோடியில் ஒருவன்’ ’தமிழரசன்’ ’பிச்சைக்காரன் 2’ ’கொலை’ ’ரத்தம்’ மற்றும் சமீபத்தில் வெளியான ’ரோமியோ’ ஆகிய அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது.



தற்போது அவர் ’அக்னி சிறகுகள்’’ஹிட்லர்’ ’காக்கி’ ’வள்ளிமயில்’ மற்றும் ’மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் டீசரில் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது

வரிசையாக தோல்வி படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி நம்பிக்கையுடன் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விடலாம் என்று தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு எந்த படமும் கை கொடுக்காத நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான இந்த படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ்,  சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement