• Jan 19 2025

மாமாவுக்கு லவ் செட் ஆயிருச்சா? குழலி -ராஜி இடையே திடீர் மோதல்.. பாண்டியன் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் தங்கமயிலுக்கு மயக்கம் வந்ததை அடுத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை குணப்படுத்துகின்றனர். அதன் பிறகு தனியாக தங்கமயிலை அழைத்துச் செல்லும் அவரது குடும்பத்தினர் ’நல்லவேளை நீ மயக்கம் போட்டு நடித்து காப்பாற்றினாய், இல்லாவிட்டால் நாம் கவரிங் நகை போட்டது தெரிந்து இருக்கும்’ என்று கூற தங்கமயில் உண்மையிலேயே மயக்கம் போட்டதாக சொல்கிறார்.

அதன் பிறகு கதிர், செந்தில், குழலியின் மாமாவுக்கு கல்யாண வீட்டில் உள்ள ஒரு பெண்ணுடன்  ரொமான்ஸ் ஏற்படுகிறது. இந்த ரொமான்ஸை பார்த்து குழலி கேலி செய்யும் காட்சிகள் உள்ளன.

இதனை அடுத்து குமரவேல் நண்பர்களிடம் இரவோடு இரவாக கல்யாண பெண்ணை தூக்குவதற்கு ஆலோசனை செய்கிறார். அதனை அடுத்து கல்யாண வீட்டில் பாண்டியன் - கோமதி ஆகிய இருவரும் புகைப்படம் எடுக்க வேண்டும் செந்தில், கதிர் விருப்பம் தெரிவிக்க அவர்கள் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். அதன் பின்னர் ஆட்டம் போடும் காட்சிகள் நடைபெறும் போது ராஜியின் ஆட்டத்தை குழலி கிண்டல் செய்து அவரது மனம் வருந்தும்படி செய்யும் காட்சிகளும் உள்ளன.



இன்றைய எபிசோட்டில் முக்கியமாக தங்கமயில் மயக்கம் போட்டு விழுந்தவுடன் சரவணன் பதட்டம் அடைகிறார். தங்கமயிலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறும் போது அவரது அப்பா வேண்டாம் தேவையில்லை, காலையிலிருந்து அவள் சாப்பிடவில்லை, அதனால் தான் கல்யாண பதட்டம் காரணமாக மயக்கம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி சமாளிக்கிறார்.

இதனை அடுத்து கோமதியும் பாண்டியனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட போது எல்லோரும் டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறுகின்றனர். அப்போது ராஜி ’நான் கல்லூரியில் படிக்கும்போது நன்றாக டான்ஸ் ஆடுவேன் என்று கூற உடனே மீனா அவரை போய் டான்ஸ் ஆடு’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து ராஜி செம ஆட்டம் ஆடும் போது குழலியும் சேர்ந்து ஆடுகிறார். அப்போது வரும் பாண்டியன் ராஜி நன்றாக டான்ஸ் ஆடியதாக சொல்ல, அப்போது என்னுடைய டான்ஸ் நல்லா இல்லையா, நான் தான் குடும்ப பெண் போன்று நன்றாக ஆடினேன், ராஜி ஆட்டக்காரி மாதிரி ஆடினாள், என்று கூற ராஜியின் முகம் சுருங்குகிறது. இதை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement