• Jan 19 2025

மீனாவை பெருமையாக பேசிய விஜயா.. வன்மத்தை கக்கிய ரோகிணி! ஸ்ருதி கொடுத்த கிப்ட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோடு வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் முத்து மீனாவின் முதலாவது திருமண நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருக்க ஸ்ருதி, ரவி சேர்ந்து முத்து மீனாவுக்கு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்கள். அதில் மீனா முத்து கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இருக்க, அதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

அதன் பின் முத்து மீனாவின் முதலாவது ஆண்டு திருமண வாழ்க்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ஸ்ருதி எல்லோரிடமும் கேட்க, முதலில் மனோஜ், என்னால தான் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு. இல்லன்னா இவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா. நீங்க எனக்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக பேசிய ரோகினி, ஒரு கணவனை மாற்ற வேண்டிய  கடமை மனைவி கிட்ட தான் இருக்கு. முத்துக்கு மரியாதையா பேசவே தெரியாது, அதை மீனா கண்டிப்பதும் இல்லை. அடுத்த வருஷமாவது அவர் திருந்தி இருப்பாரா என்று பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.

அடுத்த ரவி பேசுகையில், இத்தனை வருஷம் நான் பார்த்த முத்துவுக்கும் இப்ப பார்க்கிற முத்துவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது எல்லாத்துக்குமே காரணம் அண்ணி தான். இவங்க ரெண்டு பேரும் சரியான ஜோடி என்று சொல்கிறார்.


அதற்கு பிறகு ஸ்ருதி பேசுகையில், எனக்கும் ரவிக்கும் கல்யாணம் நடந்ததற்கு முக்கியமான காரணம் மீனா தான். முத்து மாதிரி  கோபப்படுறவர் கூட வாழ்வது ரொம்ப கஷ்டம். ஆனால் மீனா அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க. எனக்கு அவங்கல ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி மீனாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

அதன்பின் விஜயா பேசுகையில், முதல்ல நான் இவ்வள என்னவோ என்று நினைச்சன். ஆனால் மீனா சரியான ஆளுதான். என்ன பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் தாண்டி மேல போயிட்டே இருக்கா. ஒரு நாள் ஸ்கூல்ல பசங்க அடிச்சுப்பாங்க ஆனா பிறகு காந்தம் போல ஒட்டிக்குவாங்க என்று தன்னை அறியாமலையே மீனாவை பாராட்டுகிறார் விஜயா.

அண்ணாமலை பேசுகையில், பிடிக்காத இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா நான் செய்த நல்ல விஷயம் இவங்க கல்யாணத்தை பண்ணி வச்சது தான். ரொம்ப பொருத்தமான ஜோடி. கணவன் மனைவியின் இப்படித்தான் இருக்கணும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லுகிறார். அடுத்ததாக பாட்டியும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மீனா பற்றி முத்து பேசுகையில், முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகவே இல்ல. என்னை முரடன் குடிகாரன் இப்படித்தான் சொல்வாங்க. ஆனால் மீனாத்தான் என்னை வித்தியாசமா பார்த்தா. அவளுக்காக என்னை மாற வச்சா. அவளுடன் வாழ்வது புது அனுபவமா இருக்கு. நல்ல விஷயம் சொன்னா கேப்பேன்  என்றார்.

மீனா முத்து பற்றி பேசுகையில், கோபத்தில் பேசுவாரே தவிர மனசுல எதுவும் வச்சுக்க மாட்டார். பாசம் வச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நான் நினைச்சதை விட ரொம்ப சந்தோஷமா இருக்கு என் வாழ்க்கை. எனக்கு அவர் தான் ஒரு அடையாளம் கொடுத்தார். இந்த கோபம் சில பழக்கமெல்லாம் பாதியில் வந்தது. அதுக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கு அதனாலதான் அவருடைய வாழ்க்கை மாறி இருக்கு. அது என்ன என்று  இதுவரைக்கும் அவர் என்கிட்ட சொல்லல. அது எப்போ எனக்கு சொல்லுறாரோ அன்னைக்கு தான் அவர் என்னை முழுசா பொண்டாட்டியா ஏத்துக்கு கிட்டாரு என்று அர்த்தம் இவ்வாறு மீனா சொல்ல, மனோஜ், விஜயாவின் முகம் மாறிவிடுகிறது.

இறுதியாக மீனாவின் அம்மா மீனா முத்து பற்றி பேச வர, அந்த நேரத்தில் சத்யா அங்கு வருகிறார். அவரைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement