• Aug 02 2025

யுவன் ஷங்கர் ராஜா பெயரில் இப்படி பிராடுத்தனமா? நடிகர் ரியோ ராஜ் இப்படி செஞ்சிட்டாரே?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

யுவன் சங்கர் ராஜா செய்யச் சொன்னதாக சொல்லி நடிகர் ரியோ செய்த சில வேலைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படம் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. YSR பிலிம்ஸ் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் ரியோ ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாக வேண்டும் என்று முந்தைய நாள் முடிவு செய்து போஸ்டர் டிசைனர், கேமராமேன், எடிட்டர்ர் உள்பட மற்ற அனைத்து டெக்னீஷியன்களையும் தயார் செய்திருக்கிறார்.

குறிப்பாக எல்லோரிடமும் போய் ’யுவன் சாரே சொல்லிட்டாரு, பண்ணி தான் ஆக வேண்டும்’ என்று பயமுறுத்தி அனைவரையும் வேலை வாங்கியுள்ளார் ரியோராஜ். அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த விஷயம் தெரிந்த போது,  என் பெயரை சொல்லி இப்படி செஞ்சிட்டீங்களே என்று யுவன் சிரித்து கொண்டே இந்த படத்தின் டைட்டிலையும் அவர் அறிவிக்கிறார்.

’ஸ்வீட் ஹார்ட்’ என்ற டைட்டிலில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க,  ஸ்வினித் சுகுமார் என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து தயாரிக்க உள்ளார் என்பதும் ஜெகன் ராஜ்வேல் ஒளிப்பதிவில் தமிழரசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்று நிமிடங்களுக்கான இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரியோ ராஜ்,  கோபிகர் ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன், துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Advertisement

Advertisement