• Sep 17 2024

‘சர்தார் 2’ படத்தில் 3 நாயகிகள்? தமன்னா குத்துப்பாட்டும் உண்டா? லோகேஷ் ஸ்டைலில் வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் மெயின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றும் , ப்ரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தனது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டு வருவார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக 'விக்ரம்’ மற்றும் ’கூலி’ படங்களுக்கு அவர் வெளியிட்ட ப்ரோமோ வீடியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் ‘சர்தார் 2’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இந்த படத்திற்கு ஒரு ப்ரமோ வீடியோவை தற்போது படமாக்கி இருப்பதாகவும் அந்த வீடியோ விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாகத்தில் ராஷி கண்ணா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நாயகி ஆக மூன்று பேர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக பிரியங்கா மோகன் மற்றும் மாளவிகா மோகன் ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் ஒருவர் ஜோடியாகவும் இன்னொருவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.



அது மட்டுமின்றி தெலுங்கு நடிகை ஆஷிகா ரகுநாத் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கலந்த ஹீரோயின் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் மேற்கண்ட 3 பேரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.  மேலும் ’சர்தார்’ முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் செண்டிமெண்ட் ஆக, தமன்னா குத்து பாட்டு இருந்தால் படம் வெற்றி பெறும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் தமன்னாவின் குத்து பாட்டும் உண்டு என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement