• Jan 18 2025

பாண்டியன் - கதிரை சேர்த்து வைத்த முத்துவேல் - சக்திவேல்.. கதறியழுத கோமதி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இன்றைய எபிசோடில் அம்மாவை அப்படி செய்திருக்கக் கூடாது என்று முத்துவேலை சக்திவேல் கண்டிக்கிறார். அதன் பிறகு அம்மாவிடம் சென்று நீங்கள் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் தன்னால் தான் தனது அம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என நினைத்து கோமதி தனது குடும்பத்தினரிடம் சொல்லி அழுகிறார். எனக்குள் இருக்கும் அம்மா பாசம் 30 வருடங்களாக உள்ளே இருக்கிறது என்றும் அதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை என்றும் அம்மா என்று கூப்பிட வேண்டும் அவருடன் சந்தோஷமாக சிரித்து பேச வேண்டும் என்று ஆசை ஆனால் அது நடக்காமலே போய்விட்டது என்று வருத்தப்பட்டு கதறி அழுகிறார். இதை பார்த்த பாண்டியன் மிகவும் சோகமாக வீட்டை விட்டு வெளியே வந்து கடைக்கு செல்கிறார்.

 அப்போது அவர் வண்டியை எடுத்துக்கொண்டு செல்லும் போது திடீரென சக்திவேல் காரை குறுக்கே நிறுத்தி வழி மறிக்கும். இதை பார்த்த கதிர் கோபத்துடன் அவரை அடிக்க செல்ல பாண்டியன் கதிரை தடுக்கிறார். இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒரு வழியாக சக்திவேல் காரை எடுக்க சொல்ல, இந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது. ஆனால் இந்த பிரச்சனையின் மூலம் பாண்டியன் - கதிர் ஆகிய இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.



இந்த நிலையில் ராஜியின் அம்மா, தனது வீட்டின் வாசலில் மிளகாய் வத்தல் காய போட்டு கொண்டிருக்கும் போது அவரை ராஜி அன்புடன் பார்க்கிறார். இதை பார்த்த மீனா கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் கடைக்கு வந்து தனது மாமாவிடம் வீட்டில் நடந்ததை கூறுகிறார். கோமதியை அவருடைய அம்மாவிடம் சேர்த்து வைப்பேன் என்று 30 வருடங்களுக்கு முன் வாக்குறுதி கொடுத்தேன், ஆனால் அந்த வாக்குறுதியை இன்னும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறும் போது அவரது மாமா அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் கோமதி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க அவருக்கு ராஜி, மீனா மற்றும் தங்கமயில் ஆறுதல் கூறுகின்றனர். அப்போது தங்கமயில்  ‘நிச்சயம் விரைவில் நீங்களும் உங்கள் அம்மாவின் பேசி விடுவீர்கள்’ என்று கூற ’எனக்கு மட்டுமல்ல, மீனா, ராஜியும் அவங்க அம்மாவுடன் பேச வேண்டும்’ என்று அழுதபடி கூற, ராஜி அவரது தோளில் சாய்ந்து அழுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement