விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
அதில் ராதிகா பாக்கியலட்சுமி கொடுத்த 10 நாள் அவகாசம் இன்றையோடு முடிவுக்கு வருகின்றது. அதனால் நாங்கள் குடும்பத்தோட விட்டுவிட்டு போவோம் என்று சொல்லுகின்றார்.
இதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைவதோடு இனியா டாடி நீங்க வீட்டை விட்டு போக கூடாது என்று அழுகின்றார்.
இதை தொடர்ந்து ராதிகா தனது பெட்டி படுக்கையுடன் கீழே வர, கோபி நானும் போய் எனது பொருட்களை எடுத்து வருகின்றேன் என்று கிளம்புகின்றார். ஆனால் ராதிகா நீங்க இங்க தான் இருக்க போறீங்க கோபி.. நானும் மையூவும் தான் வீட்டை விட்டுப் போகின்றோம் என்று அதிர்ச்சி கொடுக்கின்றார்.
மேலும் இனியாவிடம் உன்னுடைய அப்பாவை உன்னிடமே விட்டுச் செல்கின்றேன் என்று சொல்லுகின்றார்.. இதை கேட்டதும் இனியா ராதிகாவை கட்டி அனைத்து அழுகின்றார். இறுதியில் ராதிகா மையூவுடன் வீட்டை விட்டு கிளம்புகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..
ஏற்கனவே கோபிக்கு பாக்யா மீது நல்ல மதிப்பும் மரியாதையும் அக்கறையும் காணப்படும் நிலையில் ராதிகாவும் தற்போது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். எனவே கோபி மீண்டும் பாக்கியா உடன் இணைவாரா? ராதிகா கோபியை விவாகரத்து பண்ணுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Listen News!