• Apr 13 2025

'தளபதி 69' புதிய டைட்டிலுடன் அமர்க்களமாக வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் படத்திற்கு பிறகு தற்போது எச். வினோத் இயக்கும் தளபதி 69வது படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.  இந்த படம் விஜயின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் கதை அவருடைய அரசியல் குறித்து பேசும் என எதிர்பார்க்கப்பட்டது.

தளபதி 69 ஆவது படத்தில் படத்தில் பூஜா ஹெக்டே ,மமீதா பைஜூ , பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜும் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற மிகப்பெரிய கட்சியை தொடங்கி மாநாட்டையும் வெற்றிகரமாக  நடத்தி உள்ளார். இதை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் இறுதி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே அரசியல் ரீதியாக விஜயின் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகும் நிலையில் இவர் முற்றுமுழுதாகவே அரசியலில் இறங்கிய பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் கட்டாயம் இந்த படத்தின் ரிலீஸின் போது பிரச்சனை கிளம்ப வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகின்றது.

இந்த நிலையில், தளபதி விஜய்யின் 69 ஆவது படத்திற்கான  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாக உள்ளது ..  ‘ஜன நாயகன்’ என்ற தலைப்போடு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் விஜய்க்கு பின்னால் உள்ள மக்கள் கூட்டத்தை எடுத்துக் காட்டும் விதமாக வெளியாகி உள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement