அண்ணா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சத்யா. இவர் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் அறிந்ததுமே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்பட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சத்யா பல இடங்களில் அமைதியாகவே காணப்பட்டார். இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது. அத்துடன் சக போட்டியாளர்களுடன் மோதல் ஏற்பட்ட நிலையிலும் அமைதியை கடைப்பிடித்தார். இதனால் அவரை பயந்தாங்கோலி என்று விமர்சித்தார்கள்.
d_i_a
இறுதியாக நடைபெற்ற ஏஞ்சல்ஸ் டேவில்ஸ் டாஸ்கின் போதும் இவருக்கும் தீபக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடிக்க இருந்தது. அந்த நிலையிலும் கூட மோதலை தவிர்த்து ஒதுங்கி இருந்தார் சத்யா. பிக் பாஸ் வீட்டில் சத்யா இருப்பதே தெரியவில்லை என்று பல ரசிகர்கள் குற்றம் சாட்டியும் வந்தார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக வெளியான சத்யா முதன் முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் எலிமினேட் ஆன சம்பவத்தை டிவியில் பார்த்து கைதட்டி சிரித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!