தமிழ் சினிமாவிலும் தான் ஆரம்பித்த பிசினஸிலும் சக்சஸ் ஃபுல்லான பெண்ணாக நயன்தாரா காணப்படுகிறார். எனினும் சமீப காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இறுதியில் அவருடைய கணவரான விக்னேஷ் சிவனும் அரச ஹோட்டல் ஒன்றை விலை பேசி கடும் ட்ரோலுக்கு உள்ளானார்.
இந்த நிலையில், சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகை நயன்தாரா தான் என்று வலைப்பேச்சு அந்தணன் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
d_i_a
அதன்படி அவர் கூறுகையில், காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்றால் அது உண்மை இல்லை.. நயன்தாராவுக்கு பல பிசினஸ்கள் கை கொடுக்கின்றன. அவற்றில் அவர் வெற்றி பெற்றவராக காணப்படுகின்றார். ஆனால் சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகையாகவே நயன்தாரா காணப்படுகின்றார்.
சமீபத்தில் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரி அமைச்சரை சந்தித்து அரச ஹோட்டல் ஒன்றை விலைக்கு பேசி இருந்தார். அவருக்கு திடீர் என கிடைத்த வாழ்க்கையில் தலைகால் புரியாமல் குதிக்கின்றார்.. இதனாலையே அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பாண்டிச்சேரி அமைச்சரை நானோ, நீங்களோ பார்க்க வேண்டும் என்றால் இப்போ பிஸியா இருக்கோம் நாளைக்கு வாங்க இல்ல அடுத்த வாரம் வாங்க என்று இழுத்தடிப்பார்கள்.
ஆனால் விக்னேஷ் சிவன் வந்ததும் அவரை அழைத்து ஒரு மணி நேரத்துக்கு கிட்ட வைத்து பேசி உள்ளார்கள். இது தான் நிலைமை என அந்தணன் தெரிவித்து உள்ளார்.
Listen News!