• Jan 19 2025

கீர்த்தியின் திருமணத்தில் ஜொலித்த த்ரிஷா..! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போட்டோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது பதினைந்து வருட காதலரான ஆண்டனி என்பவரை கோவாவில் வைத்து திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறையிலும் இந்து முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். அவருடன் கூடவே த்ரிஷாவும் சென்று இருந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக காரில் சென்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

d_i_a

 ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் விஜய்க்கும் இடையில் பல கிசு கிசு தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் உள்ள நட்பின் அடையாளமாக கோவாவுக்கே சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தார் விஜய். 


மேலும் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் பட்டு வேட்டி சட்டையில் இருந்த புகைப்படம் வெளியானது. ஆனால் திரிஷாவின் புகைப்படம் ஒன்று கூட வெளியாகவில்லை என இணையவாசிகள்  கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் அட்லீ, அவருடைய மனைவி பிரியா மற்றும் த்ரிஷாவும் உள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement