கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் மொத்தமாக 20 பேர் கலந்து கொண்டனர்.
அதில் மூன்று நாட்களில் தானாகவே முன்வந்த நந்தினி, பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று வெளியேற, முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தியும், கடந்த வாரம் அப்சராவும் வெளியேறி உள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்கினால் வீடு கலவரமாக காணப்படுகின்றது. அதிலும் திவாகருக்கும் கம்ருதீன் வினோத்துக்கும் இடையே வாக்குவாதம் நீளுகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் ஆன் சீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விக்கல்ஸ் விக்கி திவாகருக்கு ஃப்ரூட் ஊட்டி விடுகிறார். அத்துடன் திவாகர் தனது ஸ்டைலில் வியானாவுடன் வாட்டர் மெலன் சாப்பிடுகின்றார்..
அதேபோல அரோராவுடனும் வாட்டர் மெலன் சாப்பிட்டுக் கொண்டு சூர்யா நடித்த சீனை நடித்துக் காட்டுகிறார். அதன் பின்பு பார்வதியிடம் வாட்டர் மெலனை காட்டி நான் இங்கல சாப்பிடுறேன், நீ அங்கால சாப்பிடு என்று சொல்ல, பார்வதி ஜோவ்..போயாஎன்று திவாகரை திட்டிவிட்டு செல்கிறார்.
இதைத்தொடர்ந்து விக்கல்ஸ் விக்கி பார்வதியிடம், மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித டீலிங் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது... ஓ... பார்வதி உனக்கு யாரு ஈடடி... நீ இல்லாட்டி இந்த கேமே போரடி என்று பாட்டு பாடுகிறார்..
Listen News!