தமிழ் திரைப்பட உலகை இசையால் பரபரப்பாக்கி வரும் பிரபல இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் நேற்று மிகுந்த சோக செய்தி இடம்பெற்றுள்ளது. தேவாவின் இளைய சகோதரர், இசையுலகில் தேவாவுடன் இணைந்து பணியாற்றி வந்த சபேஷ் நேற்று திடீரென உடல் நலக்குறைவினால் காலமானார்.

சபேஷ் கடந்த பல வருடங்களாக இசை உலகில் தேவாவுடன் இணைந்து பணியாற்றியவர். இவர் மிகுந்த திறமை வாய்ந்த இசையமைப்பாளராகவும் இருந்தவர். தற்பொழுது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக ,ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த துக்கமான நிகழ்வின் பின்னணி குறித்து தேவா, தனது உணர்வுகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதன் போது, "இன்னைக்கு நான் உங்க முன்னாடி இசை அமைப்பாளராக இருக்கிறதுக்கு காரணமே என் தம்பிங்க தான்.

அவங்க இல்லன்னா நான் இவ்ளோ படம் பண்ணியிருக்க முடியாது. 14 வருசமா ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் வீட்டில இருப்போம்... மத்த நேரத்தில எல்லாரும் ஸ்டுடியோவில தான் ஒன்னா இருப்போம். கச்சேரிக்கு கூட ஒன்னா போவோம். ஆனா இன்னைக்கு என்னோட ஒரு கையே போன மாதிரி இருக்கு..." என்று கூறியுள்ளார் தேவா.
இந்த உரையில் தேவா தன் சகோதரரின் தனிப்பட்ட வாழ்விலும், அவரது இசைத் துறையிலும் மிகப்பெரிய பங்களிப்பு அளித்ததை உணர்த்தியுள்ளார். சகோதரரின் இழப்பால் அவரது குடும்பமும், இசை உலகமும் மிகுந்த கவலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!