• Oct 30 2024

விஜய்க்கு வாழ்த்து சொல்ல இதை தான் யூஸ் பண்ணுவீங்களா? வனிதா போட்ட போட்டோவால் சர்ச்சை

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய்யின் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இருந்தார். மைக் மோகன், லைலா, சினேகா, பிரேம்ஜி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜோகி பாபு என பல நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் இந்த படம் வெளியானது.

கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 500 கோடி ரூபாய் வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத்தொடர்ந்து தளபதி விஜய் 69 வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த படம் தான் இவரது இறுதி படம் எனவும் சொல்லப்படுகின்றது.

தமிழக வெற்றிக்கழக கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் ஆரம்பித்த போதும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே ஒரு பக்கம் சினிமாவில் நடித்து கொண்டு இன்னொரு பக்கம் அரசியல் சார்ந்த களப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இதை தொடர்ந்து இன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விசாலை கிராமத்தில் பிரம்மாண்ட செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் என்ன உரையாற்ற போகிறார்? என்ன கொள்கைகளை தெரிவிக்க போகின்றார் என்ற ஆர்வம் பலருக்கும் காணப்படுகிறது.


இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவரான விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வனிதா விஜயகுமார் விஜயுடன் நடித்த படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி தலைவி வாழ்க எனவும் உங்க கல்யாணத்துக்கு தளபதி வருவாரா எனவும் கேள்வி எழுப்பியதோடு தளபதிக்கு வாழ்த்து சொல்ல இந்த போட்டோவை தான் யூஸ் பண்ணனுமா என வனிதாவை வம்பு இழுத்து கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.  

Advertisement