தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இந்த கட்சியை கலந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்தார். இதன் முதலாவது மாநில மாநாடு இன்றைய தினம் விசாலை எனும் கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்காக தனது சொந்த நிதியில் பல ஏற்பாடுகளை செய்துள்ளார் விஜய்.
குறித்த மாநாட்டில் ஆறு லட்சம் பேர் பங்கெடுப்பார்கள் என யூகிக்கப்பட்டது. இதற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டு அதில் சேர்கள் போடப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக மொத்தமாக ஐந்து நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவாக வெளியே செல்வதற்காக 15 வெளியேறும் வழிகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
அது மட்டும் இன்றி மாநாட்டு திடலில் இருபுறமும் பார்க்கிங் ஏரியாக்கள் அமைக்கப்பட்டு சுமார் 5,000 மேற்பட்ட வாகனங்களை அதில் நிறுத்திக் கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் சுட்டெரித்ததால் அங்கு குவிந்துள்ள மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர்.
சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது. அதன் பின்பு அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.
இதேவேளை, விஜயின் மாநாட்டிற்கு வந்த தொண்டர்களில் ஒரு சிலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!