தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது அரசியல் ரீதியாகவும் சினிமா ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் போர்டு பிரச்சனையில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. மேலும் கரூர் விவகாரம் தொடர்பில் இரண்டாவது தடவையாக சிஐடி விசாரணையில் ஆஜராகி இருந்தார் விஜய்.
இவ்வாறு இளைய தளபதி விஜய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தாலும் அவருடைய மக்கள் அவருக்கு சார்பாக பல கருத்துக்களை இன்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு நடிகர் கருணாஸ் கடுமையாக விமர்சித்து பேசி பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
அதில் அவர் கூறுகையில், விஜய் இருமுறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். எனவே பாஜக அழுத்தம் கொடுத்து அவரை கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றதா என்ற கேள்வி கேட்கப்ட்டது.

அதற்கு பதில் அளித்த கருணாஸ், இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். எதற்குமே வாய் திறக்க மாட்டேன் என்றால் அது என்ன? டப்பிங்கிற்கு மட்டுமே நான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி? என ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் கேரளாவிலும், ஹிந்தியிலும் எத்தனையோ படங்கள் வெளியாகின்றன. அவை எல்லாம் கற்பனை கதைகள் தான். அப்படி இருக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சில படங்களை மட்டும் தடை செய்கின்றார்கள்.
ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு முடக்கி தங்களுடைய செயல் திட்டத்திற்குள் விஜயை கொண்டு வரவே பாஜக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்கு நான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!