• Apr 15 2026

"ஜனநாயகன்" படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாரா.? வெளியான ஷாக்கிங் அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் உருவாகிய “ஜனநாயகன்” திரைப்படம் கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சியில் உள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இப்படம், ஜனவரி 9, 2026 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சர் பிரச்சனை காரணமாக, திரைப்படத்தின் வெளியீடு இன்னும் தாமதமடைந்துள்ளது.


இந்த தாமதம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அவர் தெரிவித்ததாவது, “ஜனநாயகன் படத்தில் நான் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளேன்." என்றார். இத்தகவல், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ், தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் என்ற நிலையில், இவரது சிறிய தோற்றம் கூட திரைப்படத்திற்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement