• Jan 26 2026

வடநாட்டு அரசியலில் பெரும் திருப்பம்.! ரஜினி காந்த் தெரிவித்த சுவாரஸ்யமான தகவல்கள்..

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு முக்கிய அரசியல் விவாதத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதாக கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். வடநாட்டு அரசியலையும், அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு முக்கிய திருப்பத்தையும் பற்றி ரஜினிகாந்த் கூறிய தகவல், ரசிகர்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வைரமுத்து தன் சமூக வலைத்தள பதிவில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார். தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்." என்று கூறியிருந்தார். 

இந்த பதிவின் மூலம், ரஜினிகாந்த் அரசியல் மட்டும் அல்லாமல் எதிர்கால நிலைகள், மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்து விசாரணை செய்யும் விருப்பம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறார். வெளியான பதிவு இதோ.!

Advertisement

Advertisement