தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் நாளை (ஜனவரி 28, 2026) அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படம், கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருந்தார். வெளியீட்டின் முதல் வாரம், படத்தின் கதைக்களம், நடிகர்கள் நடிப்பு குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அமேசான் பிரைமின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ‘வா வாத்தியார்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமிங் ஆகும். இதன் மூலம் இந்தியா முழுவதும் மற்றும் உலகின் பல நாடுகளில் படத்தை பார்வையிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!