• Jan 28 2026

என்னதான் உருட்டினாலும்.. உங்க படம் இளைஞர்களை பாதிக்கிறது.! லோகேஷை வம்பிழுத்த ப்ளூசட்டை.!

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விவகாரம் வெளியாகியுள்ளது. திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் சமீபத்திய நேர்காணலில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்த சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவரது விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.


நேர்காணலில் ப்ளூசட்டை மாறன், “எத்தனை விதவிதமாக உருட்டினாலும்.... சினிமா மூலம் தொடர்ந்து போதை கலாச்சாரத்தை பரப்பி இளைஞர்களின் சீர்கேட்டை தொடர்ந்து உண்டாக்கும் படைப்புகளில் உங்கள் படங்கள் தான் முதலிடம். இது குற்றச்சாட்டு இல்ல.. உண்மை. நீங்கள் ஏற்காவிட்டாலும், இது தான் உண்மை என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.” என்று கூறியுள்ளார். 

இந்தக் கருத்து, திரைப்படங்கள் இளைஞர்களின் மனப்பான்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதனை வெளிக்காட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement