தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தனது நடிப்புத் திறமை, தனித்துவமான தேர்வுகள் மற்றும் இளம் ரசிகர்களிடையே கொண்டுள்ள பெரும் வரவேற்பால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விஜய் தேவரகொண்டா, தற்போது தனது 14-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான அதிகாரபூர்வ தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு ‘ரணபாலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் முக்கிய அம்சமாக, விஜய் தேவரகொண்டா தனது ‘டாக்ஸிவாலா’ திரைப்படத்தை இயக்கிய ராகுல் சங்க்ரித்யன் உடன் மீண்டும் இணைந்துள்ளார். ‘டாக்ஸிவாலா’ படம் வெளியான போது அதன் வித்தியாசமான கதை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், இந்த கூட்டணி மீண்டும் இணைவது சினிமா ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகும் ‘ரணபாலி’, வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஒரு பிரமாண்டமான திரைப்படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை விஜய் தேவரகொண்டா நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்த படத்திலும் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரணபாலி’ படத்தின் Title Glimpse வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!