• Jan 28 2026

விஜய்க்கு தம்பியா நடிக்க தனுஷ் மறுத்தார்.. எந்த படத்தில் தெரியுமா? ரிவீல் செய்த இயக்குநர்

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த இருபது ஆண்டுகளாக ரசிகர்களால் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘பகவதி’ படம் விளங்குகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்த படத்தில் இடம்பெற்ற தம்பி கேரக்டர் குறித்த ஒரு சுவாரஸ்யமான பின்னணி தகவலை, படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் வெங்கடேஷ், " பகவதி படத்தில தம்பி கரெக்டருக்கு தனுஷை தான் மைண்ட்டில வச்சிருந்தேன். அவரும் கதைய கேட்டுட்டு இதுல நான் என்ன பண்றேன்னு கேட்டார். அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது அவர் கிட்ட தம்பி கேரக்டர் நடிக்க சொல்லி தான் வர சொல்லி இருக்கோம்னு சொல்லாம கூட்டிட்டு வந்துட்டாங்க.. ஏன்னா அவர் தான் ஹீரோன்னு நினைச்சிட்டு வந்திட்டார். 


நானும் இந்த தம்பி கேரெக்டர் பண்ணீங்கன்னா விஜய் சார் எப்படி கேப்டன் கூட நடிச்சி B&C ஏரியாவை எல்லாம் புடிச்சாரோ....நீங்களும் புடிச்சுடுவீங்கன்னு சொன்னேன். ஆனா, அதுக்கு அவர் 'காதல் கொண்டேன்' வந்தாலே நான் B&C-ல இறங்கிடுவேன் என்று சொன்னார் தனுஷ். அந்த வார்த்தையை நான் இன்னும் மறக்கவே இல்ல.." என்று கூறியுள்ளார். 

இயக்குநர் வெங்கடேஷ் பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ‘பகவதி’ படத்தின் தம்பி கேரக்டர் குறித்த இந்த பின்னணி தகவல், தமிழ் சினிமாவின் ஒரு மறக்க முடியாத நினைவாக தற்போது மாறியுள்ளது.

Advertisement

Advertisement