• Jan 26 2026

வயதை வென்ற அழகி.. புடவையில் நட்சத்திரம் போல மின்னும் நடிகை திரிஷா.! லீக்கான ஸ்டீல்கள்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் முதன்மையானவர் நடிகை திரிஷா. கடந்த இரு தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்துவரும் அவர், இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். 


அழகு, நடிப்பு திறமை, ஸ்டைல் என அனைத்திலும் தனித்துவம் காட்டி வரும் திரிஷா, அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட  லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் பாரம்பரிய உடையான புடவை அணிந்து, மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “வயதை வென்ற அழகு.!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement