• Jan 28 2026

கோமதியின் வார்த்தையால் வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன்.! டுடே எபிசொட்

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி சக்திவேலைப் பார்த்து கதிர் ஒன்னும் ராஜியை கல்யாணம் பண்ணிக்க விரும்பல நான் தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன் என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் ஷாக் ஆகுறார். மேலும், என்பையன் நல்லவன் தான் என்கிறார் கோமதி. பின் கோமதி நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைத் தொடர்ந்து சக்திவேல் எல்லாம் உன்னோட திட்டமா இதெல்லாம் என்று கேட்க்கிறார்.


பின் முத்துவேலும் சக்தி பேசுறது எல்லாம் சரிதான்... என்னோட மகள் விஷயத்தில தலையிட நீ யாரு என்று கேட்கிறார். அப்புடியே, எல்லாரும் சண்டை பிடிச்சிட்டு அங்கிருந்து கிளம்புறார்கள். அதைப் பார்த்த கோமதி அழுது கொண்டிருக்கிறார். பின் கோமதி பாண்டியனைப் பார்த்து, நான் உண்மையை மறைக்கணும் என்று நினைக்கல என்கிறார். 

அதைக் கேட்ட செந்தில் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திட்டு சாதாரணமா மன்னிப்புக் கேட்டால் எல்லாம் சரியாகிடுமா என்று கேட்க்கிறார். பின் ராஜி அந்த நேரத்தில அத்தை எதை பற்றியும் யோசிக்கல என்னைப் பற்றி மட்டும் தான் யோசிச்சாங்க என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் சரவணன் கிட்ட யாரையும் என்கிட்ட பேசவேணாம் என்கிறார்.


அதைக் கேட்ட சரவணன் அம்மா வேணும் என்று இதெல்லாம் செய்திருக்கமாட்டா என்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் கோமதியைப் பார்த்து என்கிட்ட மறைச்சு துரோகம் செய்திட்ட இனிமேல் கதைக்காத என்று சொல்லிட்டு வீட்டை வீட்டுக் கிளம்புறார். பின் கதிர் பாண்டியனைப் பார்த்து அம்மா பக்கம் இருக்கிற நியாயத்தையும் புரிஞ்சு கொள்ளணும் என்கிறார். மறுபக்கம் அரசியும் கோமதியை பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement