ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களை குதூகலிக்கச் செய்யும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) தொடர், இந்த வருடமும் அதிக எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் CCL தொடரில் சென்னை கிங்ஸ், கர்நாடகா புல்டோசர்கள், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் தே ஷெர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னைக் கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற முக்கிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் விக்ராந்த், தன் அதிரடியான ஆட்டத் திறனைக் காட்டி சதம் அடித்தார். ஒரு வீரராக மட்டுமல்லாமல், அணியின் தலைவர் எனும் பொறுப்பையும் உயர்ந்த முறையில் நிறைவேற்றிய அவர், அசத்தலான பேட்டிங் திறனுடன் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
விக்ராந்த் சதம் அடித்த பிறகு, மெர்சல் விஜய் ஸ்டைலில் அந்த சதத்தை கொண்டாடினார், இது தொடரில் சிறந்த Moment-ஆக காணப்பட்டது. அந்த கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அதனைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தற்போது, அந்த வீடியோக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Listen News!