• Jan 26 2026

ரவி தேஜா பிறந்தநாள் ஸ்பெஷல்.! "இருமுடி" பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் ‘மாஸ் மகாராஜா’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரவி தேஜா, தனது 77-வது திரைப்படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், மாஸ் அம்சங்களையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்து வரும் ரவி தேஜா, இந்த முறை ஒரு ஆன்மிகத் தொனியுடன் கூடிய கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த புதிய திரைப்படத்தில், ‘மஜிலி’ படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா ரவி தேஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே, தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இன்று நடிகர் ரவி தேஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ‘இருமுடி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அத்துடன், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement