• Jan 26 2026

"மன சங்கர வர பிரசாத் கரு" இயக்குநர் காட்டில மழை தான்.! குவியும் பரிசுகள்..

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் சிரஞ்சீவி, தற்போது தனது சமீபத்திய படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இப்படத்தின் இயக்குநருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.


சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மன சங்கர வர பிரசாத் கரு’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்துடன் சென்று பார்க்க ஏற்ற வகையில், முழுமையான கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படம், பண்டிகை காலத்தில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்கியவர் அனில் ரவிபுடி. இவர் ஏற்கனவே ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம், தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். 


இந்த படத்தில், நடிகை நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவி – நயன்தாரா கூட்டணி மீண்டும் திரையில் தோன்றியது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. நயன்தாராவின் கதாபாத்திரம் கதைக்கு முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடிக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். பொதுவாக, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் இயக்குநர்களை இப்படிப்பட்ட பரிசுகளின் மூலம் கௌரவிப்பது சிரஞ்சீவியின் பழக்கமாக இருந்து வருகிறது. இதுவே அவரை ஒரு நடிகராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் ரசிகர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது.


Advertisement

Advertisement