• Jan 28 2026

பாதி படத்துலயே ஓடி வந்திடலாம்னு தோணுச்சு.. ரஜினியின் "ஜெயிலர்" குறித்து இயக்குநர் பகீர்

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சமீபத்திய நேர்காணலில் வழங்கிய கருத்து தற்பொழுது வைரலாகி வருகிறது. அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ‘ஜெயிலர்’ படத்தைப் பற்றி அவர் கூறிய கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேர்காணலில் ராஜகுமாரன், “நான் இப்ப வாற படங்களை பார்ப்பதே இல்ல... அப்படித் தான் ரஜினியின் ஜெயிலர் படத்தைப் பார்த்தேன். பார்க்கவே கொடுமையாக இருந்தது.. பாதி படத்துலயே ஓடி வந்திடலாம்னு ஆகிடுச்சு. சகிக்க முடியல.. ஆனா, அவரோட கபாலி, காலா படத்தோட பார்க்கையில ஜெயிலரைக் கும்பிடலாம். காலா படத்துல அவரோட ட்ரெஸ் கூட புடிக்கல... அப்படி ஒரு ரஜினியை பார்க்கவே புடிக்கல. அதில அவர் பார்க்க அழகாகவே இல்ல..... அந்தப் படத்தை பார்க்கிறத பாதியிலேயே நிப்பாட்டிடேன்.” என்று கூறியிருந்தார். 

இந்த நேர்மையான விமர்சனம், ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் புகழ்பெற்றவர். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறும். இந்நிலையில், ராஜகுமாரனின் கருத்து பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement