தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் சரத்குமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட வாழ்க்கை அனுபவங்களும், தந்தை குறித்து கூறிய கருத்துகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த பேட்டியில் சரத்குமார், தனது தந்தையின் பழக்கவழக்கங்கள், தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் சிகரெட்–மதுபானம் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை மனதார பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்துகள் பலரிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் சரத்குமார், "எங்க அப்பா டெல்லில வேலை செய்திட்டு இருந்தார். அங்க ரொம்ப குளிர் அதனால அங்க அவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. ஆனா, எங்க அப்பா என்கிட்ட சிகரெட் பிடிக்காத, தண்ணி அடிக்காதன்னு சொன்னதே இல்ல....
என் பணத்துல சிகரெட் பிடிக்காத, தண்ணி அடிக்காதன்னு சொன்னார். அதெல்லாம் தாண்டி அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம். அத மட்டும் மனசில வச்சிக்கனு சொன்னார். நான் என் வாழ்க்கைல சிகரெட் பிடிச்சது இல்ல... தண்ணி அடிச்சது இல்ல... சினிமாவில மட்டும் தான் சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிச்சு இருக்கேன்." என்று தெரிவித்திருந்தார்.
திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தாலும், இந்த பழக்கங்களில் இருந்து அவர் தன்னை விலக்கி வைத்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த பேட்டி வெளியானதிலிருந்து, சரத்குமாரின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!