2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த ‘அனிமல்’ படம், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்டி டிம்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. இப்படம் குறுகிய காலத்தில் மட்டுமல்லாமல், 2023ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக சினிமா வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அதன் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து, நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்தில் தெளிவாக பேசியுள்ளார். ஹாலிவுட் செய்தி தளம் Deadline Hollywood-இல் இடம்பெற்றுள்ள ஒரு நேர்காணலில், ரன்பீர், அனிமல் படத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரன்பீர் கபூர் தனது பேட்டியில், “அனிமல் பார்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என்று உறுதிப்படுத்துகிறேன்.” என்றார்.
இதன் மூலம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், ரன்பீர் இந்த படத்தில் ஒரே நேரத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் என்ற இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார். இது, ரன்பீர் ரசிகர்களுக்குப் பெரிய காத்திருப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது, அனிமல் படத்தை மூன்று பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் சந்தீப் ரெட்டி வங்கா இருப்பதாகவும் ரன்பீர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று பாகங்களும் ஒரு தொடர்ச்சியான கதை வடிவில் அமையும். இதன் மூலம், அனிமல் உலகத்தை விரிவாக காட்சிப்படுத்தி, கதையின் திரில்லையும், அதிரடியையும் இன்னும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!