தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தனித்துவமான இடத்தை பிடித்துள்ள பாடகி சின்மயி, திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். MeToo இயக்கத்திற்குப் பிறகு, இந்திய திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசும் முக்கிய குரல்களில் ஒருவராக சின்மயி கருதப்படுகிறார்.

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சின்மயி பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி,“திரைத்துறையில் வாய்ப்புக்காக பெண்களிடம் பாலியல் உறவை எதிர்பார்க்கும் சூழல் இல்லை” என தெரிவித்த சின்மயி அதனை எதிர்த்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த கருத்து வெளியானதும், பலரும் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
அதாவது, " சினிமாத்துறை கண்ணாடி இல்ல. சம்மதிக்க மறுத்தால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், சிரஞ்சீவியின் காலத்தில் பெண் கலைஞர்கள் மதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்பொழுது கமிட்மென்ட் என்ற பெயரில் வேலைக்கு பாலியல் உறவை எதிர்பார்க்கின்றனர்." எனக் குறிப்பிட்டுள்ளார் சின்மயி.
சின்மயியின் இந்த கருத்து, பல பெண் கலைஞர்கள் இதற்கு முன்பு கூறிய அனுபவங்களோடு ஒத்துப்போகும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். வேலை கிடைக்க வேண்டும் என்றால், சில நேரங்களில் பெண்கள் மீது தவறான எதிர்பார்ப்புகள் வைக்கப்படுவதாகவும், அதற்கு மறுத்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் சின்மயி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!