• Jan 28 2026

"ஜனநாயகன்" வெளியாக தற்போதைக்கு வாய்ப்பில்லை... நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு.!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 


ஆனால், படத்திற்கு தணிக்கை குழுவின் சான்றிதழ் வழங்கப்படாததால், படம் காலதாமதமாகியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின் படி, தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்துவார். இதன் அடிப்படையில், திரைப்படம் எந்த தேதி வெளியிடப்படும் என்பது தனி நீதிபதியின் முடிவைப் பொறுத்ததாகும். 

அத்துடன், ஜனநாயகன் படத்தின் காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரிய தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். 

Advertisement

Advertisement