• Jan 26 2026

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மோகன்லால் நடிக்கும் புதிய படம்.! வெளியான அறிவிப்பு

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நடிகர் மோகன்லால், தனது நீண்ட கால திரையுலக பயணத்தில் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை மீது கொண்ட ஆர்வம் என அனைத்திலும் தனித்துவம் காட்டி வரும் அவர், இன்று வரை பல தலைமுறைகளின் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். 


அந்த வகையில், அவரது 367வது திரைப்படம் குறித்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக, இந்த படம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யா – உக்ரைன் போர் காலத்தில், உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்ட ‘ஆபரேஷன் கங்கா’ (Operation Ganga) நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கதைக்களம், முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, உணர்ச்சிபூர்வமான மற்றும் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லால் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர் இந்த கதையில் நடிப்பது, படத்திற்கு கூடுதல் வலுவாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement