• Jan 26 2026

ராஜியை சரமாறியாக கேள்வியெழுப்பும் சக்திவேல்... உச்சகட்ட கோபத்தில் கத்தும் கோமதி.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சக்திவேல் ராஜியைப் பார்த்து உனக்கு நானும் அண்ணனும் ஒரு பையனைப் பார்த்து நிச்சயதார்த்தம் பண்ணோம் நினைவில இருக்கா என்று கேட்கிறார். அதைக் கேட்ட ராஜி எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் காந்திமதி சக்திவேலைப் பார்த்து இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாத கதையை கதைச்சிட்டு இருக்கிற என்று கேட்கிறார்.


அதைத் தொடர்ந்து கோமதி சக்திவேலைப் பார்த்து நான் இந்த வீட்டுக்கு வந்தது உங்களுக்கு பிடிக்கல இப்ப நாங்களே சம்பந்திகள் ஆகிட்டோம் என்கிறார். அதைக் கேட்டமுத்துவேல் எதுவுமே கதைக்காமல் சிரிச்சுக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து சக்திவேல் கதிர் ராஜியை கல்யாணம் செய்திருக்க கூடாது என்கிறார். பின் காந்திமதி சக்திவேலை கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கச் சொல்லுறார். 

அதைக் கேட்ட ராஜி நான் இப்ப சந்தோசமா இருக்கிறேன் என்கிறார். பின் சக்திவேல் நீ நல்லா இருக்கிற என்று நினைச்சிட்டு இருக்கிற என்கிறார். மேலும் நீ பண்ண தப்பால குமாருக்கு இன்னும் கல்யாணம் நடக்கல என்று ராஜியைப் பார்த்துச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து காந்திமதி சக்திவேல் கிட்ட நீ இங்க வந்ததுக்கு வராமலே இருந்திருக்கலாம் என்கிறார்.


பின் பழனி அண்ணா நீ வேணும் என்று இதெல்லாம் செய்து கொண்டிருக்கிற என்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் கடைக்கு போய்ட்டு வாறன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் சக்திவேல் கதிரைப் பார்த்து கேடு கெட்ட ஜென்மம் என்று சொல்லிப் பேசுறார். அதைக் கேட்ட கோமதி இப்படி எல்லாம் பேசாத என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement