மலையாள சினிமாவில் எதிர்பார்ப்பு அதிகம் கொண்ட திரைப்படங்களில் ஒன்று பேட்ரியாட். இந்த புதிய படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தன்மையான நடிப்பில் ரசிகர்களை மிரட்டியுள்ளனர்.

பேட்ரியாட் திரைப்படத்தில், குஞ்சாக்கோ போபன், பகத் பாசில் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நடிகர்கள் படத்தின் கதை, அதிரடி காட்சிகள் மற்றும் மாபெரும் தயாரிப்புக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக, நயன்தாரா இதுவரை நடித்து வந்த சில முன்னணி கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோற்றமளித்து ரசிகர்களை கவரவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.படக்குழு சமீபத்தில் வெளியிட்ட புதிய போஸ்டர் மூலம், பேட்ரியாட் திரைப்படம் ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
Listen News!