சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மகத்தான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா, தரமான கதைகளை உருவாக்கும் இயக்குநராக மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகின்றார்.
தற்போது, இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகுவதுடன் பெரிய நட்சத்திரங்கள் கலந்து நடிப்பதால் படம் மாஸானதாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் தற்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மலையாள திரையுலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இணைத்துள்ளார் என படக்குழு கூறியுள்ளது.
மலையாளத்தில் சினிமாவை புதுமையாக கையாளும் இயக்குநர் பசில் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் சூர்யாவை வைத்து தமிழ் படம் ஒன்று இயக்கவுள்ளதாக இருந்த நிலையில், இப்போது நடிகராக தமிழில் அறிமுகமாகவிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!