• Apr 16 2025

இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைய மறுத்த விக்ரம்..! காரணம் என்ன?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது மாஸான நடிப்பு மற்றும் திரைப்பயணத்தில் வித்தியாசமான கதைத் தேர்வுகளைச் செய்யும் நடிகரான விக்ரம் பற்றிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. குறிப்பாக விக்ரம், இயக்குநர் மகிழ் திருமேனியை கண்டுகொள்ளவில்லை என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாயுள்ளது.


இதற்கு காரணம், விக்ரம் தனது படத்திற்காக மகிழ் திருமேனியை அழைத்தபோது அவர் ‘விடாமுயற்சி’ படத்தில் பிசியாக இருந்ததால் மறுத்துவிட்டார் என்பது தான் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, தற்போது விக்ரம் அவரை மீண்டும் அணுகாமல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விக்ரம் எப்போதும் வித்தியாசமான இயக்குநர்களை தேர்வு செய்து அவர்களுடன் புது முயற்சிகளை மேற்கொள்வதில் திறமையாக இருப்பவர். தற்போது அவர் எந்த இயக்குநரை தேர்வு செய்யப்போகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement