• Mar 13 2025

அடுத்த நயன்தாரா "டிராகன்" பட கயாடுவா..? வெள்ளித்திரையில் பட்டையக்கிளப்பும் நடிகை!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய நடிகைகள் வெற்றிக்கான பாதையில் வேகமாக பயணிக்கிறார்கள். குறிப்பாக, நயன்தாரா, சமந்தா மற்றும் திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க பல புதிய நடிகைகள் தற்பொழுது தயாராகிவிட்டனர்.

அந்த வரிசையில், ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ள கயாடு இப்பொழுது அடுத்த நயன்தாரா என புகழப்படுகிறார். இது அவருக்கு தமிழ்த் திரையுலகில் கிடைத்த பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ‘டிராகன்’ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம். இதில் கயாடு தனக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.


கயாடு முதலில் ராகவா லாரன்ஸ் இயக்கும் படத்தின் மூலமே தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் படப்பிடிப்பினைத் தொடரமுடியவில்லை. அந்த வாய்ப்பை இழந்தாலும், அவர் ‘டிராகன்’ படத்தில் நடித்ததால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் பிடிக்க வாய்ப்பு உருவாகியிருந்தது. நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி சாம்ரஜ்ஜியத்தையே அமைத்திருக்கின்றார். அவரது இடத்தை கயாடு பிடிப்பாரா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement