• Jan 30 2026

"லாக்டவுன்" திரைப்படத்தின் கதை இதுதானா.? நடிகை தேவயானி கொடுத்த ரிவ்யூ.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “லாக்டவுன்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜனவரி 30-ம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம், கடந்த காலம் நடந்துள்ள உண்மையான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.


“லாக்டவுன்” திரைப்படத்தில் முன்னணி நடிகர் அனுபமா பரமேஸ்வரன் கதையின் மையப் பாத்திரமாக நடித்துள்ளார். COVID-19 காலத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய இந்த படம், அந்தச் சிக்கலான காலத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். திரைக்கதையை துல்லியமாக வடிவமைத்து, ஒவ்வொரு காட்சியும் ஊக்கமுள்ளதாகவும் உணர்வுபூர்வமாகவும் உருவாக்கியுள்ளார்.


நடிகை தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டியில், “லாக்டவுன் திரைப்படம் ரொம்ப எமோஷனல்லாக இருக்கு... இப்படத்தில் அனுபமா ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. டைட்டிலே கோவிட் டைமில நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைச்சு படத்தை இயக்கியிருக்காங்க... படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார். 

இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அனுபமாவின் நடிப்பு திறன், கதையின் உணர்ச்சி நிறைந்த காட்சிகள், மற்றும் இயக்குநரின் கண்ணோட்டம் ஆகியவற்றை அவர் பாராட்டியுள்ளார். இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

Advertisement

Advertisement