இந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கதை சொல்லல், வன்முறை கலந்த யதார்த்தம் மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கும் திறன் ஆகியவற்றால் லோகேஷ் கனகராஜ், பான்-இந்தியா அளவில் கவனம் ஈர்த்த இயக்குநராக மாறியுள்ளார்.

அதேபோல், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகவும், ‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்த்த நடிகராகவும் திகழ்கிறார் அல்லு அர்ஜுன். இந்த இரண்டு பெரும் நட்சத்திரங்களும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.
‘புஷ்பா’ படங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தேர்வு செய்யும் படங்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு புதிய தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது, இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவரை இந்த படத்தில் இணைத்தால், பான்-இந்தியா ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!