இந்திய இசை உலகில் தனித்துவமான குரலையும், மனதைத் தொடும் பாடல்களையும் கொண்ட பாடகர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அரிஜித் சிங் தான். அவரது பெயரை நேரடியாக அறிந்திருக்காவிட்டாலும், அவர் பாடிய பாடல்களை ஒருமுறையாவது கேட்காமல் இருப்பது அரிது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு, அவரது குரல் இந்திய ரசிகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது.

பெங்காலி, ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடி, எல்லைகளைத் தாண்டி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் அரிஜித் சிங். காதல், பிரிவு, வேதனை, நம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது குரலின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்டவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமாவிலும், அவரது குரலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மெலோடி பாடல்கள் முதல் உணர்ச்சி நிறைந்த பாடல்கள் வரை, அரிஜித் சிங்கின் குரல் தமிழ் ரசிகர்களிடமும் தனி இடத்தைப் பெற்றது.
இந்த நிலையில், அரிஜித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், “அனைவருக்கும் வணக்கம்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனிமேல் பின்னணிப் பாடகராக நான் எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதோடு நான் விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்." என்று கூறியுள்ளார்.
Listen News!