தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், இயல்பான உரையாடல்களாலும் ரசிகர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த நடிகர் மொட்ட ராஜேந்திரன், சமீபத்திய நேர்காணலில் உணவுக் கலாச்சாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியில் கூறிய கருத்துகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் மொட்ட ராஜேந்திரன், உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்துப் பேசும்போது, “எனக்கு சாப்பாடு பெரிய விஷயமல்ல. எத கொடுத்தலும் சாப்பிடுவேன். வீட்ல சாப்பாடு இல்லன்னு சொன்னால் கூட தயிர் ஊத்தி ஊறுகாய தொட்டுக் கூட சாப்பிட்டிருவேன். அதனால சாப்பாட்டுக்கும் பிட்னஸ்ஸுக்கும் சம்மந்தம் இல்ல.

ஜிம்முக்குப் போனா சிக்கன சாப்பிடுங்க, பவுடர சாப்பிடுங்கன்னு டார்ச்சர் பண்ணுவாங்கன்னு ஜிம்முக்கு போனது இல்ல. நான் நம்ம சாப்பாட்டை சாப்பிட்டுட்டு வீட்டிலேயே எக்ஸ்ஸர்ஸைஸ் பண்ணுவேன். அத தினமும் பண்ணாலே நம்ம உடல் ஆரோக்கியமா இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், அவர் உணவுப் பழக்கங்கள் பற்றிய தனிப்பட்ட மனப்பாங்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பேட்டி, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியபோது, ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!