திரையரங்குகளைத் தொடர்ந்து, ஓடிடி தளங்கள் தற்போது திரைப்பட ரசிகர்களின் முக்கியமான பொழுதுபோக்கு மேடையாக மாறியுள்ளன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் முதல், கதையை மையமாகக் கொண்ட வித்தியாசமான முயற்சிகள் வரை, ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பல முக்கிய திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் “வா வாத்தியார்”. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது, எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், கார்த்தியின் நடிப்பு மற்றும் படத்தின் காமெடி கலந்த காட்சிகள் சில ரசிகர்களிடையே கவனம் பெற்றன.
தற்போது, இந்த திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தபடியே இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஓடிடி வெளியீட்டின் மூலம், படம் புதிய ரசிகர்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலி, அஜு வர்கீஸ், மற்றும் ரியா ஷிபு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “சர்வம் மாயா”. இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம், வருகிற 30-ம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
அத்துடன், விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில், கால்பந்து விளையாட்டை பின்னணியாகக் கொண்டு உருவான திரைப்படம் தான் “சாம்பியன்”. இந்த படம், வருகிற 29-ம் தேதி நெட்பிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ராஜாசாப்”. இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாகவே இருந்து வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில், இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் (Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறாக, கார்த்தியின் “வா வாத்தியார்”, நிவின் பாலியின் “சர்வம் மாயா”, கால்பந்து பின்னணியில் உருவான “சாம்பியன்”, மற்றும் பிரபாஸ் நடித்த “ராஜாசாப்” என நான்கு படங்களும் வெவ்வேறு ஜானர்களைச் சேர்ந்தவை என்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஓடிடி தளங்களில் சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!