தமிழ் சினிமாவில் 75 வயதிலும் கதாநாயகனாக மாஸ் காட்டும் ஒரே ஒரு நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்ந்து வருகின்றார். இவருக்கு இப்போதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுவதோடு இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களும் ஹிட் கொடுத்து வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், 75 வயதிலும் நடிப்புக்கு முழு அர்ப்பணிப்புடன் உள்ள ரஜினி, தனது திரை வாழ்க்கை அனுபவங்களை உலகளாவிய ரசிகர்களுக்கு பகிர்வதற்காக சுயசரிதை நூலை எழுதத் தொடங்கியுள்ளதாக அவரது இளைய மகள் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

இந்த நூலில் வெற்றிகள், தோல்விகள், சந்தித்த சவால்கள் மற்றும் திரையுலகில் பணியாற்றிய அனுபவங்கள் அனைத்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் 50 ஆண்டுகளுக்கு மேலான திரை வாழ்க்கை அனுபவத்தில் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை பகிரும் போது, ரசிகர்கள் மற்றும் திரையுலகிற்கு புதிய தகவல்கள் வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் சென்சேஷனல் ஆகும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
Listen News!